கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டை சேர்ந்த முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது

சிதம்பரம், மார்ச் 1:  சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் பல்வேறு கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீதிகுடி என்ற கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே கஞ்சா வைத்திருந்த வெளிநாட்டு இளைஞர் ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த புருனோ முகவேனி மானா (27) என்பதும், சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் தங்கி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகையியல் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்ததும் தெரிய வந்தது. மேலும் படிப்பு முடிந்ததால் இன்னும் சில தினங்களில் விமானத்தில் தனது சொந்த நாட்டுக்கு செல்ல இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.  இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\

Related Stories:

>