பந்தலூர்,மே12: பந்தலூர் அருகே பிதர்காடு சுற்று வட்டார பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளர் பாதிப்படைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பிஎஸ்என்எல் தொலை தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.சமீப நாட்களாக பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முறையாக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என கூறுகின்றனர். பிஎஸ்என்எல் தொலை தொடர்பு கோபுரத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பதால் இந்த சேவை குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் தொலை தொடர்பு கோபுரத்தை சீரமைத்து சேவை குறைபாடுகளை சரிசெய்வதற்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
