புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் திறப்பு

 

 

ஊட்டி, மே 9: நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், கே.708. நீலகிரி கூட்டுறவு சங்கத்தின் பார்க்கிங் வசதியுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் கோத்தகிரியில் மக்களின் உபயோகத்திற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதனை நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் மருத்துவர் சித்ரா திறந்து வைத்தார். விழாவில், துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் அஜித்குமார், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் கமல் சேட், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர், பொது மேலாளர் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: