மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் இன்று திமுக சார்பில் அன்னதானம்

திருச்சி், மார்ச் 1: மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் திமுக சார்பில் இன்று அன்னதானம் நடக்கிறது. திருச்சி மாநகர திமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு இன்று (1ம் தேதி) திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இன்று காலை 8 மணியளவில் கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள விடிவெள்ளி மனநல காப்பகத்திலும், அண்ணாநகர் மல்லிகைபுரம் அன்னை ஆசிரமத்திலும், காலை 8.10 மணிக்கு ரங்கம் கங்காரு முதியோர் இல்லத்திலும், 8.15க்கு கிராப்பட்டி முதியோர் இ்ல்லத்திலும், 12.45 மணியளவில் உறையூர் செசலியா முதியோர் இல்லத்திலும் அன்னதானம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு புத்தூர் விழி இழந்தோர் பள்ளியிலும், 1.10 மணிக்கு மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை விழி இழந்தோர் பள்ளியிலும், 1.20 மணிக்கு  மன்னார்புரம் விழிஇழந்தோர் பள்ளியிலும், 1.30 மணியளவில் பொன்மலைப்பட்டி காதுகேளாதோர் பள்ளியிலும், 1.35 மணிக்கு காட்டூர் அந்தோணியார் முதியோர் இல்லத்திலும் அன்னதானம் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>