கொழும்பு: இலங்கை அனுராதபுரத்தில் உள்ள புத்த மட துறவியாக இருப்பவர் பல்லேகாமா ஹேமரத்தனா(71). புத்த மடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பாக துறவி ஹேமரத்தனா மீது கடந்த மார்ச் மாதம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் சிறுமி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை நடத்திய போதுதான் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து துறவிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தனர். இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கொழும்புவில் ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த புத்த துறவியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார் என இலங்கை போலீசார் தெரிவித்தனர்.
