சாத்தூரில் 500க்கும் மேற்பட்ட அதிமுக, தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்

சாத்தூர்,மார்ச் 1: சாத்தூர் தனியார் மண்டபத்தில் ராஜபாளையம் ஒன்றிய தொகுதிக்கு உட்பட்ட அதிமுக, தேமுதிகவினர் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். சாத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள மண்டபத்தில் இதற்கான விழா நேற்று நடைபெற்றது. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ முன்னிலையில் ராஜபாளையம் ஒன்றிய தொகுதிக்கு உட்பட்ட மேலராஜகுலராமன், அய்யனாபுரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அதிமுக அய்யனாபுரம் பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சீனிவாசன், சாத்தூர் நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரை

Related Stories: