நாகை – இலங்கை பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுதாகி நின்ற நிலையில் சுமார் 7 மணி நேரமாக உணவின்றி தவித்த 141 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நடுக்கடலில் கப்பல் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தவித்த 141 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மீனவர்கள் மீட்புப் படகுகள் மூலம் பயணிகள் கப்பலை துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர். மீட்கப்பட்ட 141 பயணிகளுக்கும் நாகை துறைமுகத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
