சென்னை: திமுக, அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த ேபட்டி: தமிழக அரசியலில் திமுகவும், அதிமுகவும் பரம எதிரிகளாக திகழ்கிறோம். சிலர் இடையில் வந்து செல்வார்கள்.
அதனால், திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்க போவதில்லை. எதிர்க்கட்சியாக இருந்து செய்யும் பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.
