தூத்துக்குடி மாவட்டத்தில் 18 பறக்கும் படை அமைப்பு தேர்தல் விதி மீறல் கண்காணிப்

தூத்துக்குடி,மார்ச்1: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்தல் விதிமுறை மீறல் பணிகள் கண்காணிப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளது.  தேர்தல் நடத்தை விதி மீறலை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பறக்கும் படையும், துணை தாசில்தார் அளவிலான அதிகாரி, ஒரு உதவியாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கி உள்ளனர். அதன்படி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிக்கும் மொத்தம் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.இதே போன்று ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழு வீதம் 18 குழுவும், ஒவ்வொரு தொகுதிக்கும் 2 குழு வீதம் 12 வீடியோ பதிவு குழுவும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு வீதம் 6 குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை துவங்கியுள்ளனர்.  மேலும் மாவட்டத்தில் அரசியல் கட்சி விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் அகற்றும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. இருப்பினும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே பறக்கும் படைகளின் பணி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: