சீர்காழி சட்டைநாதசுவாமி கோயிலில் முத்து சட்டைநாதருக்கு சிறப்பு வழிபாடு

 

சீர்காழி, மே 9: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதசுவாமி திருக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு பார்வதி ஞானப்பால் வழங்கிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திருமுலைப்பால் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருமுலைப்பால் உற்சவம் கடந்த 22ம் தேதி தருமபுர ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது. விழாவின் கடைசி நாள் விழாவில் முத்து சட்டைநாதசுவாமிக்கு70வது ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் முத்து சட்டைநாதர் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து முத்து சட்டைநாதருக்கு காலை சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம், தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடை பெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Related Stories: