திருச்சி, மே 9: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் கதிரேசன் (46) பெயிண்டர்.
இவரது வீட்டினருகே மே.5ம் தேதி அப்பகுதியை சேர்ந்த சிலர் நின்று சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். அதனை இவரது மகன் கேட்டபோது, அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.பின்னர் மறுநாள் அந்த கும்பல் கதிரேசனின் வீட்டிற்கு வந்து தந்தை மகனை திட்டி, டூவீலர் சாவியால் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து எ.புதூர் செட்டயாப்பேட்டை அன்பிலார் நகரைச் சேர்ந்த சஞ்சய் (19), சாரூன் (22), பிரகாஷ் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பிரபாகரன் என்பவரை தேடி வருகின்றனர்.
