தர்பூசணி ஐஸ்கிரீம்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய தர்பூசணி – 4 கப்
சுண்டக் காய்ச்சிய பால் – 3 கப்
சர்க்கரை – 1 கப்
ஃப்ரெஷ் க்ரீம் – 200 கிராம்
ரோஸ் எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

பாலில் சர்க்கரை சேர்த்து கரைத்து, உடன் தர்பூசணியை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இத்துடன் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்றாக கலந்து பாக்ஸில் நிரப்பி ஃப்ரீஸரில் வைக்கவும்.
1 மணி நேரம் கழித்து எடுத்து மீண்டும் மிக்ஸியில் அடித்து பாக்ஸில் சேர்த்து செட் செய்து, ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஐஸ்கிரீம் நன்கு செட்டானதும், பொடித்த தர்பூசணி துண்டுகளை அலங்கரித்து பரிமாறவும்.