மாம்பழ லட்டு

தேவையான பொருட்கள்:

*நெய் – 1 டீஸ்பூன்
*துருவிய தேங்காய் – 1 கப்
*மாம்பழ கூழ் – 1/2 கப்
*குங்குமப்பூ – 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
* பால் பவுடர் – 3 1/2 டேபிள் ஸ்பூன்
* கண்டென்ஸ்டு மில்க் – 2 டேபிள் ஸ்பூன்
* பவுடர்டு சுகர் தேவையான அளவு (விருப்பமிருந்தால்)
* டெசிகேட்டட் தேங்காய் – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போகும் அளவில் நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் மாம்பழ கூழை சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
*பிறகு அதில் 3 1/2 டேபிள் ஸ்பூன் பால் பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி, அல்வா போன்று நன்கு திரண்டு வரும் வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
*பின்னர் கையில் நெய்யை தடவி, அந்த மாம்பழ கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.
*இறுதியாக அந்த லட்டுக்களை டெசிகேட்டட் தேங்காயில் பிரட்டி எடுத்தால், சுவையான மாம்பழ லட்டு தயார்.