பாதாம் பிரெட் சாண்ட்விச்

தேவையானவை:

வறுத்துப் பொடித்த பாதாம் – ¼ கப்
நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 1 கப்
சில்லி சாஸ், தக்காளி சாஸ் தலா – 2 டீஸ்பூன்
மல்லி நறுக்கியது – ஒரு பிடி
பட்டர் – 50 கிராம்
கோதுமை பிரெட் – 20 துண்டுகள்
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

பொடித்த பாதாம், நறுக்கிய வெங்காயம், தக்காளி, சில்லி டொமோட்டோ சாஸ், மல்லித்தழை, உப்பு எல்லாம் நன்கு கலந்து, கோதுமை பிரெட் நடுவே சிறிது மொத்தமாக தடவி மூடி, பட்டர் விட்டு டோஸ்ட் செய்து அட்டகாசமாக டிஃபன் பாக்ஸில் வைக்கவும்.