காய்கறி சத்து சாதம்

தேவையான பொருட்கள்:
சாமை / தினை 1 கப்
காரட் 1
பீன்ஸ் 5
பட்டாணி 2 ஸ்பூன்
வெங்காயம் 1
நெய் 1 ஸ்பூன்
மிளகு, சீரகம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:
சாமையை கழுவி வேகவைக்கவும். வெங்காயம் மற்றும் காய்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் நெய் ஊற்றி மிளகு, சீரகம் தாளிக் கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த சாமை மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான காய்கறி சத்து சாதம் தயார்.

நன்மைகள்:
*இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம்.
*குழந்தைகளுக்கு நல்ல ஜீரணம்
*நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும்.