வாழைத்தண்டு சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்:
சிக்கன் 250 கிராம்
வாழைத்தண்டு 1 கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
சிறிய வெங்காயம் 10
தக்காளி 1
பூண்டு 6 பல்
இஞ்சி 1 சிறிய துண்டு
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
தண்ணீர் 4 கப்
நெய் அல்லது நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை:
வாழைத்தண்டை நறுக்கி மோர் தண்ணீரில் போட்டு வைத்தால் கருமை ஆகாது. சிக்கனை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து லேசாக இடித்துக் கொள்ளவும்.

சூப் செய்யும் முறை:
குக்கரில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து சுருங்கும் வரை வதக்கவும். அதில் இடித்த மசாலா சேர்க்கவும். சிக்கன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு வாழைத்தண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றவும். குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் வடிகட்டி சூப்பாக பரிமாறலாம். மேலே கொத்தமல்லி தூவி சூடாக குடிக்கலாம்.

மருத்துவ பயன்கள்:
வாழைத்தண்டின் பயன்கள்:
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும்.
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும்.
மலச்சிக்கலை குறைக்கும்.
உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.
சிறுநீர் எரிச்சலை குறைக்க உதவும்.

சிக்கன் பயன்கள்:
உடலுக்கு நல்ல புரதச்சத்து தரும்
உடல் பலத்தை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

சூப்பின் பயன்கள்:
உடல் சோர்வை குறைக்கும்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு சக்தி தரும் உணவாக பயன்படுத்தலாம்.
இரத்த அழுத்தம் மற்றும் உடல் வீக்கம் உள்ளவர்களுக்கு லேசான உணவாக உதவும்.
ஜீரணத்திற்கு எளிதானது.

– ஹேமலதா வாசுதேவன்.