சல்சா ரெசிபி

தேவையானவை:
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 1,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சில்லி சாஸ், தக்காளி சாறு – தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி இரண்டையும் தக்காளி சாறு ஊற்றி வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், சில்லி சாஸ் ஆகியவற்றை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பொரித்து வைத்த நாச்சோஸை இந்த சல்சாவில் தொட்டுச் சுவைக்கவும்.