சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் நல்லதண்ணீரை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை

சீர்காழி, மே 8: சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரையை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தேனூர் புதுமண்ணியாற்றிலிருந்து உப்பனாறு பிரிந்து தேனூர், ஆதமங்கலம், ஆலஞ்சேரி, மருதங்குடி, புங்கனூர், பனமங்கலம், துறையூர், சட்டநாதபுரம், காரைமேடு, புதுத்துறை, திருநகரி வழியாக சென்று திரு முல்லைவாசல் கடலில் கலக்கிறது. உப்பனாற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 2,000 ஏக்கரில் நடவு பணிகளை செய்து வந்தனர். 15 அடி ஆழத்தில் நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கடல் நீர் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு உட்புகுந்ததால் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறியது.

எனவே கடல்நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது திருநகரி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதன் மூலம் உப்பனாற்றில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நல்ல தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சட்டநாதபுரம் பகுதியில் உப்பனாற்றில் ஆகாயத்தாமரை மண்டிக்கிடப்பதால் நல்ல தண்ணீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆடு, மாடுகள் கூட ஆற்றுநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உப்பனாற்றில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

Related Stories: