திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார கஷ்டப்பட்டார்: அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி

புதுச்சேரி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார கஷ்டப்பட்டார் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி அளித்துள்ளார். அதிமுக ஒரு இரும்புக்கோட்டை; அதில் எந்த ஓட்டையும் இல்லை என தெரிவித்தார். சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புதுச்சேரிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் வந்துள்ளனர். இன்னும் சிலர் இங்கு வர இருக்கிறார்கள். அதிமுக எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிசாமி கடலில் குதிக்கச் சொன்னால்கூட அவர்கள் குதிப்பார்கள் என கூறினார்.

Related Stories: