சென்ைன: பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்காமல் தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கூடாது, என்று தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. அறுதி பெரும்பான்மைக்கு தேவைப்படும் 118 எம்எல்ஏக்களை அவரது கட்சி பெறவில்லை.
நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் தவெகவுக்கு 107 இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே, அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 11 உறுப்பினர்களின் எண்ணிக்கை அவருக்கு தேவைப்படுகிறது. அரசியல் சாசன கொள்கைகளை உறுதி செய்யும் வகையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்காமல், விஜய்க்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று கோரியுள்ளார்.
