தா.பாண்டியன் மறைவிற்கு அனைத்து கட்சியினர் அமைதி ஊர்வலம்

ஈரோடு, மார்ச் 1: தா.பாண்டியன் மறைவையொட்டி ஈரோட்டில் அனைத்து கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவையொட்டி அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில், ஈரோட்டில் அனைத்து கட்சியினர் சார்பில், அமைதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

அக்கட்சியின் மாநில நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் துவங்கி மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர் வழியாக வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து அனைத்து கட்சியினர் சார்பில், இரங்கல் கூட்டமும் நடந்தது. இதில், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.தென்னரசு, தி.மு.க. ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணி, கலை இலக்கிய பிரிவு வீரமணி, தி.க. மாநில அமைப்பாளர் சண்முகம், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஈபி ரவி, சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாஷா, பா.ஜ. முன்னாள் பிரசார அணி தலைவர் சரவணன் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், பா.ம.க, வி.சி.க. போன்ற அரசியல் கட்சியின் நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>