3வது நாளாக சாலைமறியல்

திருச்சி, பிப். 26: மாற்றுதிறனாளிகளுக்கு புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்குவது போல் மாதாந்திர உதவித்தொகை 3000 ரூபாய் தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கடந்த 2 நாட்களாக சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக மாற்று திறனாளிகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் கோபிநாத், மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், மாவட்டத்தலைவர் ஜெயபால் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதில் 12 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>