முலாம்பழ ஐஸ்கிரீம்

தேவையானவை:

முலாம்பழம் – 2
பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 2 கப்
கஸ்டர்ட் பவுடர் – 2 டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் – 4 துளிகள்

செய்முறை:

கஸ்டர்ட் பவுடர் மற்றும் சர்க்கரையை 2 கப் பச்சைப் பாலில் நன்றாக கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சர்க்கரை கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். முலாம்பழத்தைக் கழுவி தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி ஆற வைத்துள்ள பால் சேர்த்து மிக்சியில் அடிக்கவும். பிறகு அதனுடன் ஐந்து துளிகள் வெனிலா எசென்ஸை விட்டு நன்றாகக் கலந்து, ஃப்ரீசரில் வைக்க வேண்டும். சாப்பிடும் போது முந்திரி, பாதாம் பருப்பு கொண்டு அலங்கரிக்கவும்.