தா.பழூர் அருகே விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

தா.பழூர், பிப்.26: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் அருகே அணிகுறிச்சி மேல தெருவை சேர்ந்தவர் விஜய் (24). விவசாயி. நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகாததால் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>