முன்னேற்பாடு பணிகள் தீவிரம் நிலைத்த நீடித்த வேளாண்மைக்கு மண்வள அட்டை பரிந்துரை பயிற்சி முகாம்

காரைக்கால், பிப். 26: காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில் விவசாயிகளுக்கான  நிலைத்த நீடித்த வேளாண்மைக்கு மண்வள அட்டை பரிந்துரை பயிற்சி முகாம், விழுதியூர் கிராமத்தில் நடந்தது. இந்த பயிற்சியானது காரைக்காலில் உள்ள மேலகாசாகுடி, சுரக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட 5 வருவாய் கிராமங்களில் நடந்தது. வேளாண் அலுவலர் மகேந்திரன் வரவேற்றார். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முகாமை துணை இயக்குனர் கணேசன் துவக்கி வைத்து பேசினார். மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்து காரைக்கால் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியர் சங்கர், பருத்தியல் உழவியல் மேலாண்மை குறித்து  நாராயணன் விவரித்தனர்.

Related Stories: