முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி, மே 5: புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி சமூக வலைத்தளம் மூலம் முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் புதுச்சேரிக்கு நன்றி, எங்களது சிறந்த நல்லாட்சி சாதனைகள் அடிப்படையிலும், ரங்கசாமி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் அடிப்படையிலும், புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மற்றொரு ஆட்சிக்காலத்தை வழங்கியுள்ளனர். இந்த வாழ்த்துக்கள் நல்லாட்சியை மேலும் மேம்படுத்த எங்களின் கூட்டு முயற்சிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: