விக்கிரவாண்டி, ஏப். 23: விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(35). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
