பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

வடலூர், ஏப். 30: விருத்தாசலம் அருகே தொப்புளிக்குப்பம் அடுத்துள்ள அம்மேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலமணி (35). இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் மனைவி பத்மா (31), மகள் மணிமேகலா (8) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கடலூர்-விருத்தாசலம் சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சென்றுள்ளார். குறிஞ்சிப்பாடி மேம்பாலம் அருகே சென்றபோது நிலைத்தடுமாறி அனைவரும் பைக்கில் இருந்து கிழே விழுந்தனர். இதில் அனைவரும் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த பத்மாவை பாலமணி மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: