கொத்தடிமைகள் ஒழிப்பு தொடர்பாக உயர்மட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்

மயிலாடுதுறை, பிப். 26: மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொத்தடிமைகள் ஒழிப்பு தொடர்பாக உயர்மட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். எஸ்பி நாதா முன்னிலை வகித்தார். மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதியரசர் பாஸ்கரன் பங்கேற்று செங்கல் சூளை உள்ளிட்ட இடங்களில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை கண்டறிந்து மீட்பது, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, சாலையோரம் சுற்றி திரியும் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு குழந்தைகள் பாதுகாப்பகத்தில் ஒப்படைப்பது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்ப்பது குறித்து பேசினார். திருவாரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், மயிலாடுதுறை ஆர்டிஓ (பொ) வேணுகோபால், மாவட்ட கொத்தடிமைகள் தொழிலாளர் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் நன்றி கூறினார்.

Related Stories:

>