பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,பிப்.26:  தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் இன்றி அரசுக்கு ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி கொடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில்  தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.  டாஸ்மாக் தொமுச மாநில இணைச்செயலாளர் சந்தனசுப்பிரமணியன் தலைமை வகித்தார். புங்கலிங்கம், பிரான்சிஸ், முத்துகிருஷ்ணன், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன், ராஜா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் தொமுச  முருகன், சின்னத்துரை, ஏஐடியூசி பாலசிங், கிருஷ்ணராஜ், வேல்முருகன் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>