பாவூர்சத்திரம் வென்னிமலை கோயில் மாசி திருவிழாவில் இன்று பால்குடம், பூந்தட்டு ஊர்வலம்

பாவூர்சத்திரம், பிப். 26:  பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 17ம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருநாளான நேற்று வணிக வைசிய செட்டியார் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு காலை சிறப்பு பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம், சுவாமி வீதியுலா, திரைப்பட இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.

மாசி திருவிழாவின் 10ம் நாளான இன்று (26ம் தேதி) நாடார் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு கீழப்பாவூர் சிவன் கோயிலில் இருந்து பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, பனையடிப்பட்டி, செட்டியூர், கல்லூரணி, குருசாமிபுரம் பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும்,  பின்னர் சுவாமி, அம்பாளுக்கு பாலாபிஷேகமும், உச்சிகால பூஜையும் நடைபெறுகிறது.

இந்து நாடார் சமுதாயம் சார்பில் அன்னதானமும், மாலையில் யானை முன் வர செண்டை மேளம் முழங்க பூந்தட்டு ஊர்வலமும், சுவாமிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. இரவு சிறப்பு அலங்கராத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா, கோயில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி,  சிறப்பு வாணவேடிக்கை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.

பிராமணர் சமுதாயம் சார்பில், 11ம் நாளான நாளை தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி வென்னிமலை முருகன் கோயிலில் இருந்து  சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கீழப்பாவூர் வந்தடைந்து, அங்கு 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், கும்ப அபிஷேகமும்

நடைபெறுகிறது.

Related Stories: