பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஓமலூர், பிப்.26: ஓமலூர் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் திரௌபதி அம்மன் கோயில்கள் புனரமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், திரௌபதி அம்மனுக்கு  புனித நீரால் அபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில் ஓமலூர் நகரை சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>