டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், பிப்.26: நாகர்கோவிலில் டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக்கில் 18 ஆண்டுகள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், அரசுத்துறையில் மாற்றுப்பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்தனர்.

 இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அதே இடத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தொமுச மாவட்ட தலைவர் ஷாபு,  சிஐடியு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜோதி,  நடேசன்,  அருள் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் தங்கமோகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர்  இசக்கிமுத்து, சந்திரசேகர் குமார்ஆகியோர் பேசினர். மால்ட்டன் ஜினின், பத்மநாபன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Related Stories: