மருதம் ஊராட்சியில் புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு

வாலாஜாபாத், பிப். 26: வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் ஊராட்சியில், புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் மழை காலங்களில், அங்கு வைக்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்கள் தண்ணீரில் நனைந்து நாசமாயின. இதையொட்டி, அங்கு புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என தொகுதி திமுக எம்எல்ஏ க.சுந்தரிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்தில், புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார் திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு ரேஷன்கடை புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இதில், திமுக நிர்வாகிகள் பழனி, இளஞ்செழியன், ராமு, சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>