நிதி நெருக்கடியை தவிர்க்க ஓய்வு பெறும் வயது உயர்வு ஆசிரியர் சங்கம் கண்டனம்

சிவகங்கை, பிப்.26: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் படித்து விட்டு அரசு பணியை எதிர்நோக்கி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை ஒரு கோடி ஆகும். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்று, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று லட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணியை எதிர்பார்த்துள்ளனர்.கடந்த ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பணி நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. அரசு பணிகளிலும் போதுமான அளவு நியமனங்கள் நடைபெறவில்லை. மாநிலம் முழுவதும் அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே கடந்த 2020 மே.7ல் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59ஆக தமிழக அரசு உயர்த்தியது. அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளது.இந்த ஆண்டு 59வயது முடிந்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்காலப் பணப்பலன்கள் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

Related Stories: