புதியபென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.25: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு காலவரன்முறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும், நிலுவை அகவிலைப்படி வழங்க வேண்டும், சென்னையில் கடந்த 19ம் தேதி மறியல் போராட்டத்தின் போது அத்துமீறி நடந்து கொண்ட போலீசாரை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>