மன்னார்குடியில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவிப்பு

மன்னார்குடி, பிப்.25: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தனர். இதில், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர், முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன், நகர செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ரெங்கராஜ், பைங்காநாடு அசோகன், சங்கர், அண்ணாதுரை, மாவட்ட இணை செயலாளர் இளவரசி இளையராஜா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜீவானந்தம், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், ஒன்றிய துணை செயலாளர் அசேஷம்அரசு, தமிழ்வாணன், இளங்கோவன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் பேசுகையில், அதிமுகவை வழி நடத்தும் சக்தி சசிகலாவிற்கும், தினகரனுக்கு மாத்திரமே உள்ளது. எனவே அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் சசிகலாவின் வேண்டுகோளை ஏற்று அவரின் வழி நடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார். தொடர்ந்து, பரவாக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் தலைமையில் அமமுக கட்சி அலுவலகத்தை மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் திறந்து வைத்து கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல்ராஜ், கிளை செயலாளர் கர்ணன் செய்திருந்தனர்.

Related Stories:

>