குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தி ரங்கோலி, கோலப்போட்டி திரளான மாணவிகள் பங்கேற்பு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கரூர், பிப். 25: ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. கரூர் மாவட்டம் புலியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில் ரங்கோலி போன்ற கோலப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு குழந்தைகள் கோலமிட்டனர். பின்னர், இந்த போட்டிகளில் சிறப்பான இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்துக்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>