விசிக பிரமுகர் கைது

ஓமலூர், பிப்.25: சேலத்தில் நடைபெற்ற பாஜ இளைஞரணி மாநாட்டிற்கு வந்த ராஜ்நாத் சிங்கை வரவேற்று, காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சேலம் வரையிலும் பேனர் கட்டியிருந்தனர். இதனால், வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளாவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருவண்ணாமலை, மணிக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் பேனர்களை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஓமலூர் போலீசார் வழக்குப்பதிந்து திருவண்ணாமலையை கைது செய்தனர்.

Related Stories:

>