பழநி கோயிலில் ரூ.7.19 கோடி உண்டியல் வசூல்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பழநி மலைக்கோயிலில் ரொக்கமாக ரூ.6 கோடியே 97 லட்சத்து 8 ஆயிரத்து 187 கிடைத்தது. இதுதவிர தங்கம் 1.035 கிராம், வெள்ளி 16,793 கிராம், வெளிநாட்டு கரன்சி 2,240 ஆகியவை கிடைத்தது.

இதுதவிர திருஆவினன்குடி கோயிலில் ரொக்கமாக ரூ.20 லட்சத்து 53 ஆயிரத்து 634, மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.18 ஆயிரத்து 480, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 137, ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் ரூ.20 ஆயிரத்து 868 என பழநி உப கோயில்களின் உண்டியல் காணிக்கைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.7 கோடியே 19 லட்சத்து 22 ஆயிரத்து 306 கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

Related Stories: