சென்னை: தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து 10,800 பேர் மனு கொடுத்திருந்தனர். அதில், ஒன்றியஅரசு கட்டுப்பாட்டில் உள்ள மும்பை ஹஜ் கமிட்டி 6275 தமிழக ஹஜ் பயணிகளை தேர்வு செய்துள்ளது. எனவே, தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பில் 6275 ஹஜ் பயணிகள் 16 விமானங்களில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். முதல் விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து 5.5.2026 இரவு 9 மணிக்கு புறப்படவுள்ள நிலையில் மே 19ம் தேதிவரை பல்வேறு கட்டங்களாக விமானங்கள் செல்லவுள்ளது. பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வரவேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து 6275 பேர் ஹஜ் புனித பயணம்: ஹஜ் கமிட்டி தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஹஜ் கமிட்டி
- சென்னை
- தமிழ்நாடு அரசு ஹஜ் குழு
- குணங்குடி ஆர்.எம். அனிபா
- மும்பை ஹஜ் குழு
- யூனியன் அரசு
- தமிழ்நாடு…
