அங்கன்வாடி ஊழியர்கள் 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, பிப்.25: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவி ராதாமணி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மணிமாலை கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3ம் நாள் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலர் அவர்களது குழந்தைகளையும் உடன் அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>