கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

கோபி : கோபி அருகே உள்ள புளியம்பட்டியில் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கள்ளிகுளம், கீழ் துவரை குளத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் ஆதிகுரு(20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவர்கள், சூரிபாளையத்தை சேர்ந்த அய்யாசாமி, திருநெல்வேலியை சேர்ந்த சேர்மன்துரை உள்ளிட்ட 10 மாணவர்கள் கோபி அருகே உள்ள புளியம்பட்டி பவானி ஆற்றில் குளிக்க சென்றனர்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆதிகுரு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியாத நிலையில், தகவல் அறிந்த கோபி தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடினர். சிறிது நேர தேடலுக்கு பிறகு ஆதிகுருவை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: