திருச்சுழி மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

திருச்சுழி, பிப்.25: திருச்சுழி மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்குபூஜை நடைபெற்றது. திருச்சுழியில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் திருவிழா  கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வியாழனன்று கொடியேற்றத்துடன்  விழா துவங்கியது . இதனையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷபூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் காலையும், இரவும் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பிப்.26ம் ேததி அம்மனுக்கு பொங்கல் உற்சவ விழா நடைபெறுவதை ஒட்டி நேற்று 1008 திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜையில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு அம்மனைத் தரிசனம்  செய்தனர்.

Related Stories: