சிலம்பாட்டத்தில் மாணவன் சாதனை

சிவகங்கை, பிப்.25: சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த சிலம்ப வீரர்களுக்கான தேர்வு போட்டிகள் மானாமதுரையில் வீரவிதை சிலம்பாட்ட கழகம் சார்பில் நடத்தப்பட்டது. பல்வேறு பிரிவாக இப்போட்டிகள் நடந்தன. இதில் 9 வயது முதல் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாம்பவிகா பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் அருண் பிரகாஷ் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். அருண் பிரகாஷிற்கு பள்ளி செயலர் சேகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

>