மணிகண்டீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்

காஞ்சிபுரம்:  தொண்டைநாட்டு தேவாரத் திருத்தலங்களில் 11வது தலமாக சிறப்புபெற்ற திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால் சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்ற தலமாகும். இங்கு, மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து  ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாள் சமேத மணிகண்டீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காலை, மாலை வேளைகளிலும் சிம்மம், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதவாகனம், மயில்வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், அதிகார நந்தி, ரிஷப வாகனம், கைலாய வாகனம், அறுபத்து மூவர், யானை ஆகிய வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து 7ம் நாளான நேற்று முன்தினம் தேதி காலை சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். அதில் திருமால்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் விஜயா, அறங்காவலர் குழு தலைவர் முரளி, உறுப்பினர்கள் கே.செல்வம், எம்.செல்வம், லட்சுமணன், ரமாபிரபா, ஆய்வாளர் நிர்மலா, செயல் அலுவலர் சித்ரா, ஆலய ஸ்தானிகர் சண்முக குருக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், பணியாளர்கள் செய்தனர்.

Related Stories:

>