படூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு? அங்கத்தினர் சரமாரி புகார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த படூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இயங்குகிறது. இதில் ஏ அங்கத்தினர் 3 ஆயிரம் பேர், பி அங்கத்தினர் 400 பேர் உள்ளனர். இதில், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பெற நிர்வாகம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அங்கத்தினர்கள் கூறுகையில், வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் எங்களது பங்கு தொகை 26 லட்சத்துக்கும் மேல் உள்ளது. இங்குள்ள அங்கத்தினர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஈவுத்தொகை வழங்கவில்லை. மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் எதை செய்தாலும் தன்னிச்சையாக செய்கின்றனர். பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு ₹500 முதல் ₹1000 வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது’ என்றனர்.

Related Stories:

>