பாஜக நியமன எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

பாகூர், பிப். 24: பாகூர் அடுத்த ஆதிங்கப்பட்டு கிராமத்தில் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஹோமியோபதி சிறப்பு முகாமுக்கு நேற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முகாமை துவக்கி வைக்க பாஜக நியமன எம்எல்ஏ தங்க.விக்ரமன், கிருமாம்பாக்கத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் தேவநாதன் ஆகியோர் சென்றனர். அப்போது, ஆதிங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் அவர்களிடம் பாஜக அடையாளத்துடன் இங்கு ஏன் வந்தீர்கள்? எங்கள் ஊருக்கும், உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை? எனக்கூறி தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ேஹாமியோபதி மருத்துவ முகாமிற்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை, பொதுமக்களே அறுத்து எறிந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நியமன எம்எல்ஏ தங்க.விக்ரமன் மற்றும் பாஜகவினரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: