ரூ.10 ஆயிரம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் ஜவுளிக்கடை முன்பு குப்பையை கொட்டிய நகராட்சி அதிகாரி: வியாபாரிகள் அதிர்ச்சி

காஞ்சிபுரம்: ரூ.10 ஆயிரம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த, நகராட்சி அதிகாரி, ஜவுளிக்கடை முன்பு குப்பையை கொட்டினார். காஞ்சிபுரம் எண்ணெய்க்கார தெருவில் உள்ள ஜவுளிக்கடையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது, கடையில் இருந்த பழைய பால் சீலிங் கழிவுகளை மஞ்சள்நீர் கால்வாய் அருகே கொட்டினர். அப்போது அப்பகுதி துப்புரவு பணியாளர் எச்சரித்ததால், கடை உரிமையாளர் மீண்டும் குப்பையை, எடுத்து சென்று வேறு இடத்தில் கொட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன், அந்த ஜவுளிக்கடைக்கு சென்ற துப்புரவு ஆய்வாளர் முகமது இக்பால் என்பவர், துணிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். அபராதம் கட்ட கடை உரிமையாளர் மறுத்ததால், துப்புரவு ஊழியர்கள், வேறு ஒரு இடத்தில் இருந்த குப்பை  கழிவுகளை கொண்டு வந்து, அந்த கடை முன் கொட்டினார்.   

Related Stories: