லாரி மோதி மாணவன் பலி

புழல்: சோழவரம் அடுத்த அத்திப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன்(19). சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றபோது முன்னால் சென்ற பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்தார். இதில் பின்னால்  வேகமாக வந்த டிரெய்லர் லாரி சூரியநாராயணன் மீது ஏறி இறங்கியது. இதில், அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். புகாரின்பேரில் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிந்து விபத்து ஏற்படுத்திய டிரெய்லர் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த மருதைய்யன்(25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>